சாம்சங் நிறுவன தலைவர் லீ சாங் ஹூனுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை

தொழிற்சங்க விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ சாங் ஹூனுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் திகழ்கிறது. இதில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ சாங் ஹூன் மற்றும் துணை தலைவராக கான்கியான் ஹூன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

 

இவர்கள் மீது அந்நிறுவன தொழிலாளர்களின் தொழிற்சங்க விதிகளை மீறியதாக சங்கத்தின் நடவடிக்கைகளை தடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு சியோல் மத்திய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் லீ சாங் ஹூன் மற்றும் கான்கியான் ஹூன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தலா 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply