100 நாள் வேலை திட்டத்தில் தமிழகம் பெஸ்ட்! மத்திய அரசு விருது

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. மாநில அளவில் 3 தேசிய விருதுகள் மாவட்ட அளவிலான நான்கு தேசிய விருதுகள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா ஒரு தேசிய விருதுகள் என மொத்தம் எட்டு விருதுகள் கிடைத்துள்ளன.

 

அவற்றை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெற்றுக் கொண்டார். மேலும் தமிழகத்திற்கு 14-வது நிதி ஆணையத்தின் நிலுவைத் தொகை மற்றும் 2020 காண செயலாக்க மானியம் சேர்ந்த 2 ஆயிரத்து 370 கோடி ரூபாயை விடுவிக்குமாறு தோமரிடம் எஸ்.பி வேலுமணி மனு அளித்துள்ளார்.


Leave a Reply