சர்வதேச மகளிர் அமைப்பான இன்னர் வீல் கிளப் (இராமநாதபுரம்) சார்பில் ஆதரவற்றோர் இல்லா இந்தியா உருவாக்குவோம் என்ற திட்டமான ‘மிஷன் மம்தா’ விருது வழங்கும் விழா கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இளமறிவியல் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி ஆர்.ஹாஜினா பானு கிராத் ஓதினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுமயா வரவேற்றார்.
இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க தலைவர் கவிதா செந்தில்குமார் தலைமை வகித்தார்.மம்தா மிஷன் குறித்து
இன்னர் வீல் சங்க நிர்வாகி டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் பேசினார்.மிஷன் மம்தா என்பது 190 நாடுகளில் , 72 ஆண்டுளாக இயங்கும் யுனிசெப் அமைப்பு அங்கீகரித்த திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் ஜெ.பாத்திமா கலிமாவின் சேவையை பாராட்டி இன்னர் வீல் கிளப் இன் உயரிய விருதான ‘மம்தா புரஸ்கார் ‘ விருது,
சக்கரக்கோட்டை அல் முமின் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பித்ததில் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நீண்ட நேர சேவை புரிந்த தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் ஆங்கிலம் மற்றும் கணினி துறைக்கு பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் மாணவியர்கள் 41 பேரில் சிறப்பிடம் பிடித்த இளமறிவியல் மூன்றாம் ஆண்டு ஊட்டச்சத்து துறை எச்.மரியம் அபிரா ,இளமறிவியல் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மாணவி ஏ.பாத்திமா தஸ்லிம், இளமறிவியல் இரண்டாம் ஆண்டு கணிதத்துறை மாணவி ஏ.டி.பவுசியா பேகம், இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பி.ஜோஸ்பின் ஜெனிஷா, இளமறிவியல் முதலாம் ஆண்டு உளவியல் துறை மாணவி எஸ்.எஸ்.பாத்திமா பதீனா ஆகியோருக்கு விருதும் மற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் வழங்கினார்.
சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவூத் கான், இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க
சங்க செயலாளர் கிருத்திகா ரகுநாத் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். இதில் கல்லூரி துணை முதல்வர் சுலைகா ஷகில், இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க நிர்வாகி கவிதா லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஏ.பர்ஹானா ஷப்ரீன் நன்றி கூறினார். முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி எப். முகமது பாஜிலா பாத்திமா, இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி இஜட்.எச்.கதீஜா ஹனீபா, இளமறிவியல் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவி எஸ்.ஐ. ஜெ.செய்யது பாத்திமா ஹாஜிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.