இங்கிலாந்து மாடல் அழகி மாளிகையில் ரூ 470 கோடி நகை கொள்ளை

இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் இருந்த 470 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. அந்நாட்டின் ஃபார்முலா ஒன்றின் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்ணி எக்லஸ்டோனின் மகள் தமரா எக்லஸ்டோன்.

 

பிரபல மாடல் அழகியான அவருக்கு 55 அறைகளை கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை உள்ளது. இங்கு கணவர் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வரும் அவர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்லாந்து நாட்டிற்கு சென்றார்.

 

அதனை அறிந்த கொள்ளையர்கள் 3 பேர் அவரது மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த 470 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பலத்த பாதுகாப்புடன் மாளிகையில் கைவரிசை காட்டியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.


Leave a Reply