நிர்பயா வழக்கு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகல்

நிர்பயா கொலை வழக்கில் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகியுள்ளார். டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர்.

 

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. இதில் மூவரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில் அக்ஷய ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்ஏ பார்த்து அமர்வில் தொடங்கியது.

 

அப்போது நிர்பயா வழக்கில் விசாரணைக்காக அவரது உறவினர் ஆஜராகி இருப்பதால் வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக எஸ்.ஏ.பாப்டே அறிவித்தார். இதையடுத்து புதிய மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வில் நிர்பயா வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply