ஃபார்ச்சூன் 500 இந்தியா பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடம்

நடப்பாண்டின் முதல் 500 பெரிய இந்திய நிறுவனங்களின் பட்டியலை சர்வதேச பொருளாதார இதழான ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ளது.

 

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயிலை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி 5 லட்சத்து 80 ஆயிரத்து 553 கோடி ரூபாய் வருவாயுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

அடுத்ததாக பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 5 லட்சத்து 35 ஆயிரத்து 793 கோடி ரூபாய் வருவாய் உடன் இரண்டாவது இடத்திலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வருவாயுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

 

மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 687 கோடி ரூபாய் வருவாய் உடன் பாரத ஸ்டேட் வங்கி நான்காவது இடத்தையும், 3 லட்சத்து 3 ஆயிரத்து 227 கோடி ரூபாய் வருவாய் உடன் டாட்டா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்த ஐந்து இடங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், டாடா ஸ்டீல்,குவல் இந்தியா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.


Leave a Reply