இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9,898 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 3,691 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை 9 ஆயிரத்து 898 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று ஊராட்சி தலைவர், கிராம வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மேலும் இராமநாதபுரத்தில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 146 பேரும், 170 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு 1,420 பேரும், 429 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 2,306 பேரும், 3075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6,126 பேர் என 3,691 பதவிகளுக்கு 9,898 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


Leave a Reply