--- --:--:-- --

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் திடீர் மாயம்

9

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய மருத்துவர் திடீரென மாயமானதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெரியகுளம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடி தெருவை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் தனது சகோதரர் வனிதாவுடன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று உள்ளனர்.

 

இருவரும் வீடு திரும்பாததால் அவர்களை காண பெங்களூர் ஆசிரமத்திற்கு பெற்றோர்கள் சென்றுள்ளனர். அவர்களை ஆசிரமத்திற்குள் நுழையவிடாமல் ஊழியர்கள் தடுத்ததால் இதுகுறித்து மனோஜ்குமாரின் பெற்றோர் அப்போதைய தேனி மாவட்ட எஸ்பி புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் மனோஜ் குமார் மற்றும் வனிதாவை பெங்களூரு போலீசார் உதவியுடன் ஆசிரமத்திலிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மருத்துவப் பணிக்கு திரும்பிய மனோஜ்குமார் கடந்த மாதம் திடீரென மாயமானார்.

 

நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு மீண்டும் சென்று உள்ளாரா என்று சந்தேகிக்கும் அவரது பெற்றோர் மகனை மீட்டு தரக்கோரி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon