--- --:--:-- --

குழந்தைகள் ஆபாச வீடியோ : கைதான கிறிஸ்டோபரின் பேஸ்புக் குழுவினர் ஓரினச்சேர்க்கையாளர்களா? பகீர் தகவல்!!

77229

குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய பேஸ்புக் குழுவில் உள்ள நண்பர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் உள்ள சுமார் 300 பேருக்கு மேலானோருக்கு போலீஸ் வலை விரித்துள்ளதால் அவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

 

சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாசப் பட வீடியோக்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளன.மேலும் இது போன்ற ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பிறருக்கு பகிர்ந்தாலோ கூட கடும் நடவடிக்கை பாயும் என்ற சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

தமிழகத்திலும் இது போன்ற ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது, பகிர்வது போன்ற செயல்கள் அதிகமாக உள்ளது என அமெரிக்க உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து, ஒரு பட்டியலையும் தமிழக காவல் துறைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் தனிப்படை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் தான் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர், ஆபாசப் படங்களை, பேஸ்புக் மூலம் தனது குழுவில் உள்ள நண்பர்களுக்கு பதிவேற்றம் செய்ததாக நேற்று கைது, செய்யப்பட்டார். 42 வயதான கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ், நிலவன், ஆதவன் என்ற புனைப்பெயர்களில் பொழுது போக்காக கடந்த 4 வருடங்களாகவே சிறுமிகளின் ஆபாச படங்கள்,வீடியோக்களை பதிவேற்றம் செய்து தமது பேஸ்புக் குழுவில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் மற்றும் அவருடைய பேஸ்புக் நண்பர்கள் குழுவின் பின்னணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தக் குழுவில் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ்புக் குழுவில் உள்ள மற்ற நண்பர்களுக்கு தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு, விருப்பம் உள்ளவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்படியே குழந்தைகள் ஆபாச வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். இதற்கு மூளையாகக் செயல்பட்டது கிறிஸ்டோபர் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால், பேஸ்புக் குழுவில் உள்ள 300-க்கும் மேற்பட்டோரின் பட்டியலைத் தயாரித்து, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் மீதும் கைது நடவடிக்கையும் பாயும் என்பதால், அந்த பேஸ்புக் குழுவில் உள்ளோர் பீதியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon