“மேக்கின் இந்தியா” திட்டத்தை “ரேப் இன் இந்தியா” என ராகுல் விமர்சனம்..! பொங்கியெழுந்த பாஜக பெண் எம்.பி.க்கள்!!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை, ரேப் இன் இந்தியா என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,மன்னிப்பு கேட்கக் கோரியும் பாஜக பெண் எம்.பி.க்கள் போர்க் கோலம் பூண்டதால் மக்களவையில் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

 

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதை கடுமையாக விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து த் திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தை உதாரணம் காட்டி, தற்போது ரேப் இன் இந்தியா போல் ஆகிவிட்டது என்று ராகுல் விமர்சித்திருந்தார். இதற்கு பிரதமர் மோடியை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக விமர்சிப்பதா? என்று பாஜக தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இன்று இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்தது. மக்களவை கூடியவுடனே அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் பாஜக பெண் எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக சபாநாயக் இருக்கை முன் குழுமினர்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது வரை எந்த ஒரு பிரதமரையும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து யாரும் விமர்சித்ததில்லை என்று கூறி தொடர்ந்து கூச்சலிட்டரை்.

 

அப்போது ராகுலுக்கு ஆதரவாக திமுக எம்.பி.கனிமொழி பேசியதால், பாஜக பெண் எம்.பி.க்கள் ஆவேசமடைந்தனர். கூட்டணிக் கட்சி என சப்போர்ட் செய்ய வேண்டாம். ராகுல் கூறிய கருத்தை ஒரு பெண் என்ற நிலையில் பாருங்கள் ஸ்மிருதிராணி உரத்த குரலில் கனிமொழியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இதனால் அமளி அதிகரிக்க சபாநாயகர் ஓம் பால் மக்களவையை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.


Leave a Reply