தனியார் நிறுவனத்தினர் ஏமாற்றியதால் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாக விருதுநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக நாடு திரும்ப உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஆவுடையார் புரத்தை சேர்ந்த முத்து கருப்பு என்பவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் வேலைக்காக சவுதிஅரேபியா சென்றுள்ளார். எலக்ட்ரானிக் உதிரிபாக தொழிற்சாலையில் வேலை இருப்பதாக கூறி அழைத்து செல்லப்பட்ட அவருக்கு டெலிபோன் ஆப்பரேட்டர் பணி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த நிலையில் தனியார் ஏஜென்சி சேர்ந்தவர்கள் தமது பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார் . உணவுக்கு கூட வழியின்றி சிரமப்படும் தன்னை மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து கருப்பு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கேட்டபோது முத்துக்கருப்பன் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.