{11-12-2019} புதன்கிழமை இன்றைய ராசிபலன்

கார்த்திகை 25 11.12.2019 புதன்கிழமை

வருடம்- விகாரி வருடம். விகாரி நாம சம்வத்ஸரம்

அயனம் – தக்ஷிணாயணம்

ருது -ஸரத் ருதௌ

மாதம்- கார்த்திகை ( வருச்சிக மாஸம்)

பக்ஷம் – சுக்ல பக்ஷம்.

திதி – சதுர்த்தசி காலை 11.39 AM.வரை. பிறகு பௌர்ணமி.

ஸ்ரார்த்த திதி -பௌர்ணமி.

நாள் – புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் }

நக்ஷத்திரம் -கார்த்திகை காலை 06.55 AM. வரை. பிறகு ரோகிணி

யோகம் -அமிர்த,சித்த யோகம்.

கரணம் – வணிஜை பத்ரம்.

?மேஷம் ராசி

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான விவகாரங்களில் அனுகூலமான சூழல் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

 

?ரிஷபம் ராசி

 

புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகஸ்தர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

கிருத்திகை : திட்டங்கள் உருவாகும்.
ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

 

?மிதுனம் ராசி

 

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கண் சம்பந்தமான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது கவனம் வேண்டும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
திருவாதிரை : சுபிட்சம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.

 

?கடகம் ராசி

 

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மனதில் இருந்துவந்த பலவிதமான கேள்விகளுக்கு பதிலும், தெளிவும் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூசம் : நினைவாற்றல் மேம்படும்.
ஆயில்யம் : தெளிவு கிடைக்கும்.

 

?சிம்மம் ராசி

 

வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : சோர்வு ஏற்படும்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

?கன்னி ராசி

 

பொதுச்செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் ஏற்படும்.
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.

 

?துலாம் ராசி

 

உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் காரியத்தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதிப் போக்கை கடைபிடிக்கவும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

சித்திரை : தடைகள் ஏற்படும்.
சுவாதி : செலவுகள் நேரிடலாம்.
விசாகம் : காலதாமதம் நேரிடும்.

 

?விருச்சகம் ராசி

 

தந்தைவழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கௌரவ பதவிகளால் செல்வாக்கு மேம்படும். ஆகாய மார்க்க பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : தரிசனம் கிடைக்கும்.

 

?தனுசு ராசி

 

போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நீர் சம்பந்தமான பணிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

 

?மகரம் ராசி

 

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுகூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

 

?கும்பம் ராசி

 

உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : கவலைகள் குறையும்

 

?மீனம் ராசி

 

உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

 


Leave a Reply