--- --:--:-- --

ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் மாணவனுக்கு எலும்பு முறிவு

11

சேலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்து எலும்புமுறிவு ஏற்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.

 

சேலம் பொன்னம்மாப்பேட்டை தெருவை சேர்ந்த நந்தகுமார் என்பவரது மகன் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர் சிறுவனை பிரம்பால் தாக்கியதில் சிறுவனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதனையடுத்து சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.

 

இது விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon