கமல் போஸ்டர் மீது சாணியடித்ததாக பேசிய விவகாரம்: ராகவா லாரன்ஸ் விளக்கம்

தர்பார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் குறித்து தாம் பேசியது சமூகவலைதளங்களில் விமர்சிக்க பட்டு வரும் நிலையில் அதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

தர்பார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது பேச்சு குறித்து ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோது மிக தீவிர ரஜினி ரசிகனாக இருந்ததாகவும் விவரம் தெரியாமல் கமலஹாசன் திரைப்பட போஸ்டர்கள் மீது சாணி அடித்ததாகவும் தற்போது அவர்கள் இருவரும் கைகோர்த்து நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தான் பேசியதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

 

நான் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விமர்சனம் செய்வதாக கூறிய அவர், முழுமையாக பார்த்தால் பேசியதில் தவறில்லை என்று புரியும் என்று கூறியிருக்கிறார்.

 

அதனால் தவறாகத்தான் எதுவும் பேசவில்லை என்பதால் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை என்றும், யாருக்கும் எதையும் நிரூபிக்கவோ, விளக்கம் அளிக்கவோ தேவையில்லை என்றும் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply