அரசு பேருந்து மோதியதில் முதியவர் பரிதாப பலி

காரைக்குடியில் அரசு பேருந்து மோதியதில் சாலையில் செல்போனில் பேசியபடி சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று வெளியே வந்துள்ளது.

 

அப்போது பேருந்து வருவதை கவனிக்காமல் செல்போனில் பேசியபடியே சென்ற முதியவர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற போது பேருந்து ஓட்டுநர் பின்னால் திரும்பி பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதாக பேருந்தில் இருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Leave a Reply