திருவனந்தபுரத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இன்று 2-வது போட்டி..! டி20 தொடரை வெல்லுமா இந்தியா..?

இந்தியா -மே.இ. தீவுகள் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, இன்றைய போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது.

 

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. தற்போது இந்தியா வந்துள்ள மே. இ.தீவுகளுக்கு எதிரான போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது .3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது.இதில் கோஹ்லியின் (94 ரன்கள் ) விளாசலில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் 2-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியிலும் வென்றால் தொடரை கைவசப்படுத்தலாம் என்பதால் இந்திய லீரர்கள் இன்றும் அபார திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பது நிச்சயம். இன்றைய போட்டியிலும், பேட்டிங்கில் கோஹ்லி விளாசலை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply