{08.12.2019} ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்

கார்த்திகை-22

{08.12.2019)ஞாயிற்றுக்கிழமை.

சந்திராஷ்டமம்-ஹஸ்தம்.

இன்று ஏகாதசி விரதம்.

ராசி பலன்கள்

08/12/2019

மேஷம் ராசி

நினைத்த காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

அஸ்வினி : காரியங்கள் ஈடேறும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : திருப்தி உண்டாகும்.

 

?ரிஷபம் ராசி

திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளின் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : எதிர்ப்புகள் விலகும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

 

?மிதுனம் ராசி

 

திருமண முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : அறிமுகம் உண்டாகும்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

 

?கடகம் ராசி

 

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

 

புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.
பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.

 

?சிம்மம் ராசி

 

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

மகம் : அறிவுகள் மேம்படும்.
பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

 

?கன்னி ராசி

 

எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : விவாதத்தை தவிர்க்கவும்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

 

?துலாம் ராசி

 

பணி நிமிர்த்தமான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் பலமாக இருந்து உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

சித்திரை : முடிவுகளை எடுப்பீர்கள்.
சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
விசாகம் : தெளிவு கிடைக்கும்.

 

?விருச்சகம் ராசி

 

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : சுபச்செய்திகள் வந்தடையும்.
கேட்டை : அனுகூலமான நாள்.

 

?தனுசு ராசி

 

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த கவலைகள் அகலும். செல்வ செழிப்பு மேம்படும். செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

மூலம் : சுபகாரியங்கள் கைகூடும்.
பூராடம் : கவலைகள் அகலும்.
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.

 

?மகரம் ராசி

 

மனதில் எண்ணிய தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்தவை காலதாமதமாக கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் சோர்வு வந்து போகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

உத்திராடம் : தேவைகள் நிறைவேறும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : அனுகூலம் ஏற்படும்.

 

?கும்பம் ராசி

 

மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாமதமான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : பணவரவுகள் வசூலாகும்.

 

?மீனம் ராசி

 

அரசாங்கம் தொடர்பான காரியங்களில் ஆதாயம் ஏற்படும். சுயதொழில் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

பூரட்டாதி : ஆதாயமான நாள்.
உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.


Leave a Reply