நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதையடுத்து அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது என்றார்.
புதிய பாஸ்போர்ட் கோரி நித்யானந்தா அனுப்பிய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார். நித்தியானந்தா குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சூடான் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் இந்தியர்கள் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி