இனி நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது

நாடாளுமன்ற உணவகத்தில் தங்களுக்குத் தரப்படும் கட்டண சலுகைகளை விட்டுத்தர எம்பிக்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்ல்லாவின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவை எம்பிகள் ஒருமனதாக எடுத்திருப்பதாக தெரிகிறது.

 

இதையடுத்து சலுகை கட்டணம் மீதம் ஆவதால் அரசுக்கு ஆண்டுதோறும் 17 கோடி ரூபாய் அளவிற்கு செலவு குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வகைகள் விற்கப்படுவது அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.

 

அண்மையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டணத்தை குறைக்க கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் நாடாளுமன்ற உணவக விலைப்பட்டியலை சுட்டிக் காட்டியிருந்தனர்.


Leave a Reply