உருட்டுக்கட்டையால் சகோதரியின் கணவரை சரமாரியாக தாக்கிய பெண்
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பெண் ஒருவர் தனது சகோதரியின் கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. புரசைவாக்கம் பாலத்தின் கீழ் சிவா, இந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 28ஆம் தேதி சிவா குடிபோதையில் தனது மனைவி இந்துவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்துவின் சகோதரி சங்கீதா உருட்டுக்கட்டையால் சிவாவை கடுமையாக தாக்கினார்.
இவர்கள் பாலத்தின் கீழ் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியிருப்பதாகவும் இதுபோன்று தகராறு நடப்பது வழக்கம் தான் என்றும் கூறப்படுகிறது. உருட்டு கட்டையால் தாக்கிய சங்கீதாவை உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




