கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி! கலாய்க்கும் நெட்டிசன்கள்

டுவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

 

2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டுகுத்து, நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவரை பிரபலமாக்கியது தனியார் தொலைக்காட்சி.

 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புக்காக நடிகை ரம்யா பாண்டியனின் புடவை புகைப்படம் வைரலானது போன்று யாஷிகாவின் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன .

யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதாக கூறி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளாகி வருகிறார் யாஷிகா ஆனந்த். எவ்வளவு கலைத்தாலும் அசராத யாஷிகா தொடர்ந்த கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

கருப்பு நிற உடையில் கால்களை தூக்கியும் உதைப்பது போன்ற சண்டை பயிற்சியில் ஈடுபடும் யாஷிகாவின் இந்த வீடியோவையும் வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்து வீடியோ பதிவிட்டுள்ளனர். அதேசமயத்தில் நெட்டிசன்கள் வரம்பு மீறி விட்டதாக நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஆதரவாக குரல்கள் இணையத்தில் ஒலிக்கின்றன.


Leave a Reply