கடலுக்குள் மெல்ல மெல்ல மூழ்கும் கிராமம்
தண்ணீர் மனிதன் வாழ இன்றியமையாதது. ஆனால் அதுவே இயற்கை பேரிடராக மாறி நம் வாழ்விடம் தேடி வரும்போது நம் வாழ்க்கை மாறுகிறது. அப்படி ஒரு மாற்றத்தை சந்தித்துள்ளனர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு கடலோர கிராம மக்கள்.
சிடியோ பரியான் இதுதான் அந்த கடலோர கிராமத்தின் பெயர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த கிராமம். சுற்றுலா பயணிகளின் வருகை, விழா, விருந்து என ஒரு காலத்தில் கலை கட்டியிருந்தது கிராமத்தை முற்றிலும் மாற்றியது ஒரு வெப்பமண்டல சூறாவளி.
2011ஆம் ஆண்டு வந்த இந்த சூறாவளியால் பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அதில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த சிட்டியோ பரியான் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தை முழுவதும் நீர் சூழ வாழ வழியின்றி 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பிறகு அவர்கள் இன்று வரை திரும்பவே இல்லை என்கின்றனர் அப்பகுதியிலுள்ள சிறுமி. அந்த பாதிப்பு அதோடு நிற்கவில்லை உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதை அவர்கள் தாமதமாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் அதை உணர்வதற்குள் கிராமம் நிலத்தை இழந்து நீருக்குள் சென்று விட்டது. தற்போது அது மிதக்கும் கிராமம் ஆகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு அந்த கிராமம் நீருக்குள் மூழ்கி வருகிறது. மிதக்கும் கிராமத்தில் வசிக்கும் சொற்ப குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கிறார்கள்.
அந்த இடத்தை விட்டு நகர பகுதிகளுக்குச் சென்றால் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்கின்றனர்.எனவேதான் அவர்கள் இந்த இக்கட்டான நிலையிலும் கூட அந்த கிராமத்திலேயே வசிக்கின்றனர். அங்கிருந்த பள்ளிக்கூடம், சர்ச் அனைத்தும் அழிந்துவிட்டன.
இருந்தபோதிலும் 30 நிமிட படகு சவாரி செய்து வேறு ஒரு பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்பகுதி குழந்தைகள் சிலசமயம் அந்த பயணம் ஆபத்தானதாகவும், சிலசமயம் நகைப்புக்குரியதாக இருக்கும் என்கிறார்கள் அக்குழந்தைகள்.
மின்சார தேவைக்கு கூரைகளின் மேல் சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறும் கிராம மக்கள் தங்கள் வீடுகளின் மூங்கில் கூடைகளை தண்ணீர் தொடாத வாறு உயர்த்திக்கொண்டே வருவதாக கூறுகின்றனர்.
ஆனால் இது வெகுகாலம் தாங்காது அக்கிரமம் முழுமையாக மூழ்கி விடும் என்று எச்சரித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதற்குள் அவர்கள் வேறு இடங்களைத் தேடி சென்று விடுவார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




