கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மாடுகளை காப்பாற்ற முயற்சி செய்து ஆற்றில் அடித்து ஏற்பட்ட செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் மீட்கப்பட்டனர். கீழ்வாய் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடைய மூன்று மாடுகள் அங்குள்ள வெள்ளாற்றில் நின்றுகொண்டிருந்தன.
அந்த சமயத்தில் ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்படவே மேடான இடத்தில் மாடுகள் தஞ்சமடைந்தன. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், சகாதேவன் மற்றும் தங்கதுரை ஆகியோர் ஆற்றில் நீந்தி சென்று மாடுகளை மீட்டுக்கொண்டு வர முயன்றனர்.
ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் மூவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். மாடுகள் தாமாகவே கரை திரும்பிய நிலையில் மூன்று இளைஞர்களையும் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!