காதல் கணவருக்கு நாய்க்குட்டி பரிசளித்த பிரியங்கா சோப்ரா
திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடிகை பிரியங்கா சோப்ரா,நிக் ஜோனஸ் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் காதல் கணவருக்கு நாய்க்குட்டியை பரிசளித்து அசத்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
உலகில் வைரல் காதல் தம்பதி யார் என்றால் சந்தேகமே இல்லமால் பிரியங்கா சோப்ரா,நிக் ஜோனஸ் ஜோடி எனலாம்.. அந்த அளவுக்கு இவர்கள் என்ன செய்தாலும் இணையத்தில் வைரல் ஆகிறது. கடந்த 2000மாவது ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா 2002ஆம் ஆண்டு தமிழில், தமிழன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட் அமெரிக்காவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி என அடுத்தடுத்து களமிறங்கிய பிரியங்கா சோப்ரா தன்னைவிட இளையவரான நிக் ஜோனஷை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

உலகில் நட்சத்திர காதல்ஜோடி என்ற அடைமொழியுடன் ஊடகங்களில் பெரிதும் கவனிக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா தம்பதி திருமணம் முக்கிய விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்க கோலாகலமாக நடந்தது. அண்மையில் இந்த ஜோடி அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பில் தங்களுக்காக வாங்கிய சொகுசு பங்களா பேசு பொருளானது.
இந்நிலையில் தங்களது திருமண வாழ்க்கை ஓராண்டை கடந்ததை கொண்டாடும் வகையில் தனது காதல் கணவருக்கு ஜீனோ என்று நாய்க்குட்டியை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள ஜோனஸ் தான் பிரியங்காவின் கணவர் ஆக இருப்பதற்கு பெருமைப்படுவதாகவும், அவராலேயே தமது புன்னகை ஒவ்வொருநாளும் புதுப்பிக்கப்படுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த உலகினாராலும் கவனிக்கப்படும் காதல் ஜோடியான பிரியங்கா சோப்ரா , ஜோனஸ் தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண விழாவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




