--- --:--:-- --

சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

10

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கடலூர் கம்மியம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் கடந்த 29ஆம் தேதி இரவு நாராயணன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

 

அதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஸ்வரி, பேத்தி தனஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விபத்து நடைபெற்ற இடத்தை திமுக தலைவர் மு ..க ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

 

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார். இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon