சாலையோர மழைநீர் வடிகாலில் தவறி விழுந்தவர் பலி

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த மண்ணுர்பேட்டையை சேர்ந்த ஷேக் அலி சிடிஎச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மழைநீர் வடிகாலில் தவறி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஷேக் அலியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply