நீங்க தூங்குனா மட்டும் போதும்! 1 லட்சம் பரிசு!
இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து வேலை செய்பவர்கள் அர்த்தராத்திரியில் விழித்துக்கொண்டு வேலை செய்தாக வேண்டும். உலகமயமாக்கலுக்கு பிறகு இந்த கலாச்சாரம் அதிகமாக வளர்ந்துவிட்டது.
பகல் முழுவதும் படுத்துக்கிடந்து விட்டு நடுராத்திரியில் வேலைக்கு போகும் பலரை நாம் இன்று பார்க்கிறோம். அதேபோல் உயர் படிப்புகளுக்கான பரீட்சைகளுக்கு படிப்பவர்கள் விடிய விடிய விழித்திருந்து படிக்கிறார்கள். இந்த முறையால் பலர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் பல வியாதிகளுக்கு சரியான உறக்கம் இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மருத்துவர்களும் 8 மணிநேரம் கட்டாயமாக எந்த சஞ்சலமும் இல்லாமல் உறங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தூக்கம் என்றால் சாதாரண கோழி தூக்கம் இல்லை.
டீப் ஸ்லிப், அதாவது பக்கத்தில் பெரிய கலவரமே நடந்தாலும் கண்களை திறந்து பார்க்காமல் தூங்கவேண்டும். தூங்கினால் யார் சார் வேலை பாக்குறது, எப்படி பணம் சம்பாதிக்கிறது என சிலர் கேட்கலாம். அப்படி தூங்க யாரும் பணம் தருவதில்லை .தந்தால் தூங்கி விடுவோம். அதற்கு சரியான ஒரு போட்டியை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூருவை மையமாக வைத்து இயங்கி வருகிறது ஸ்டார்ட் ஆஃப் வேக்ஃபிட் நிறுவனம்.
இந்த நிறுவனம் 9 மணிநேரம் இடைவிடாமல் தூங்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இது ஒரு நாள் அல்ல 100 நாட்கள் இடைவிடாமல் தூங்கவேண்டும். இந்த போட்டிக்காக ஒரு அறையை அவர்களை தருவார்கள். அந்த அறையில் நீங்கள் சரியாக உறங்குகிறார்களா என கண்காணிக்க ஒரு ஆளை நியமிப்பார்கள்.
மேலும் நீங்கள் தூங்குவது போல் நடித்தால் அவ்வளவுதான். அதை உங்கள் தலையணையை காட்டிக்கொடுத்துவிடும். இந்த போட்டிக்கு நீங்கள் தயார் என்றால் உடனே விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள என்ன திறமை இருக்க வேண்டும் யார் கலந்து கொள்ளலாம் என்பது குறித்து சில விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அதாவது தூங்குவதில் உங்களுக்கு வெறித்தனமான ஆர்வம் இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்கு வழங்கியுள்ள நேரத்தில் சரியான தூங்கக் கூடிய திறனை பெற்றிருக்கவேண்டும். படுக்கைக்கு சென்ற பத்து முதல் இருபது நிமிடத்திற்குள் தூங்கிவிட வேண்டும். இரவில் வரும் எந்த ஒரு அழைப்பையும் எடுக்காமல் இருக்கும் மன உறுதியை பெற்றிருக்க வேண்டும் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக ஒன்பது மணி நேரம் தூங்கலாம் என்று நினைக்கிறீர்களா அப்போது நாங்கள் தேடும் சிறந்த போட்டியாளராக நீங்களே இருக்க முடியும் என்று தனது இணையதளத்தில் கூறியுள்ளது. அவ்வாறான விண்ணப்பங்களை நாங்கள் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்காக அழைப்பு விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




