சென்னை விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்
கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருக்கைக்கு அடியில் பொட்டலம் இருப்பதை கண்டறிந்தனர். இதை எடுத்து அவற்றை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதில் 23 தங்க கட்டிகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.அதே விமானம் மீண்டும் ஹைதராபாத் செல்ல இருந்ததால் கொழும்புவில் இருந்து ஹைதராபாத்திற்கு நூதன முறையில் தங்கத்தை கடத்தல் மர்ம நபர்கள் திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த பைசல் முகமது என்பவரிடம் 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 547 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




