சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் வழக்கு தொடர்பான கோப்புகளை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொன் மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கோரி டிராபிக் ராமசாமி மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதவி நீட்டிப்பு கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் அனைத்து கோப்புகளையும் அரசிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.