நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் 8 சதவீதமாக இருக்க வேண்டிய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார். மேலும் பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




