பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது!

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பதினோராம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

 

பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகிய 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Leave a Reply