மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்தார். மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ் மும்பையிலுள்ள வர்ஷா என்ற பெயருடைய அரசு வீட்டில் குடியிருந்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும் முதல்வர் பதவி கேட்டு கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. அஜித் பவாருடன் சேர்ந்து திடீரென பட்னாவிஸ் மீண்டும் முதல்வரான நிலையில் 4 நாட்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிந்தது.
அதன்பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான மூன்று கட்சி கூட்டணி ஆட்சி பதவியேற்றுள்ள நிலையில் உடனடியாக தனது அரசு வீட்டை பட்னாவிஸ் காலி செய்தார்.