டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோன் பாத் பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதற்காக மாளிகையில் 23 மற்றும் 24 வது நுழைவு வாயிலின் அருகில் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 20 குழாய்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் காரில் வந்த சிலர் குழாய்களை திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இந்த குழாய்களை இவர்கள் மீரட்டில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.