ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பெண் பயணியை, காப்பாற்றிய ரயில்வே காவலர்

கோவையில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பெண் பயணியை பத்திரமாக ரயிலில் ஏற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கோவையில் இருந்து மங்களூர் செல்லும் கோவை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அப்போது ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு குடும்பம் ரயிலில் அவசரஅவசரமாக ஏறியது.

 

இதில் கடைசியாக ஏறிய பெண் பயணி தவறி விழ இருந்தார். அப்போது அங்கிருந்த ரயில்வே காவலர் பாலகிருஷ்ணன் சுதாரித்துக்கொண்டு கீழே விழ இருந்த பெண்ணை பத்திரமாக ரயில் பெட்டிக்குள் தள்ளி அவரை காப்பாற்றினார். இந்த காட்சி ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.


Leave a Reply