காஞ்சிபுரம் அருகே இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பகுதியில் வசிப்பவர் பூபதி. இவருக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவரை காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடிவந்த நிலையில், தனியார் தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர் இழந்திருக்க கூடும் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி புகார் அளித்தனர்.
எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.