கோட்சே தீவிரவாதியா இல்லையா?: ஒரே வரியில் மோடியிடம் பதில் வேண்டும்

கோட்சே தீவிரவாதியா? இல்லையா? என ஒரே வார்த்தையில் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடி பாஜக தலைமைக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இதுதொடர்பாக காங்கிரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பாஜக எம்பி பிரக்யா தாகூர் தேசவிரோத கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோல்வி பிரக்யா தாக்குதலின் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றது என்றும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கோட்சே தீவிரவாதியா இல்லையா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்குமாறும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


Leave a Reply