தேனி மாவட்டம் போடியில் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி இளைஞரை கொலை செய்ய மலேசியாவை சேர்ந்த பெண் கூலி படையை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அசோக் குமார் என்ற இளைஞர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவரும் மலேசியாவை சேர்ந்த அருணா என்பவரும் முகநூல் மூலம் காதலித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அசோக்குமாரை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார்.
அப்போதுதான் அவருக்கு 40 வயது என்பது அசோக்குமாருக்கு தெரியவந்தது. 25 வயது அசோக்குமார் 40 வயது அருணாவை மணந்து கொள்ள மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபுரத்திலுள்ள அசோக்குமாரின் பெற்றோரை சந்தித்து தமக்கும் அவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
அதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதால் மீண்டும் மலேசியாவிற்கு சென்று அருணா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருணா அசோக்குமாரை பழிவாங்க மலேசியாவில் இருந்தபடியே மதுரை மற்றும் தேனியௌ சேர்ந்த கூலிப்படையை நியமித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அசோக்குமாரை கொலை செய்வதற்காக போடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த கூலிப்படையை சேர்ந்த 10 பேர் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டனர்.