காரில் சீட் பெல்ட் அணியாததால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் விபத்துகளில் உயிரிழந்தோரின் 78% பேர் சீட்பெல்ட் அணியாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு 2068 பேர் கார் விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 614 பேர் சீட்பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிக அளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகவும் கூறப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சுமார் 11.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

காரில் பயணிக்கும் மூன்றில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணியாமல் இருப்பதாகவும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply