மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால அவைத்தலைவராக பாரதிய ஜனதாவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

மூத்த உறுப்பினரே இடைக்கால அவைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 8 முறை சட்டமன்ற தேர்தல்களில் வென்றுள்ள காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இதனுடைய மகாராஷ்டிராவில் பதினான்காவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 287 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காளிதாஸ் கொலம்ப்கர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


Leave a Reply