தாய்க்கு கோயில் கட்டியவர் சாலை விபத்தில் மரணம்

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு கோவில் ஒரு தாய்க்கு மகன் கட்டிய ஆலயம். திருச்சியில் பிரபல வழக்கறிஞராக இருந்த ராஜராஜ சோழனின் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

 

உடல்நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாயார் இறந்த நிலையில் அவரின் நினைவாக 30 லட்சம் ரூபாய் செலவில் தனது சொந்த இடத்தில் கோயில் கட்டி அதில் தனது தாயின் சிலையை நிறுவினார் ராஜராஜசோழன்.

 

தந்தையும் எழுத்தாளருமான இளவழகன் இறந்ததும் அவரின் உடலும் இங்கு புதைக்கப்பட்டது. தாய் தந்தையை தெய்வமாக வணங்கி வந்த இந்த குடும்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது இரு மகன்களையும் சிலம்பம் வகுப்புக்கு அழைத்து சென்று திரும்பியபோது சரக்கு லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ராஜராஜசோழன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரு மகன்களில் மூத்த மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இளையமகன் மட்டும் உயிர் தப்பினார். தந்தையும், மகனும் எதிர்பாராத விபத்தில் இறந்தது இந்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விபத்தில் இறந்த வழக்கறிஞர் ராஜராஜ சோழனையும் அவரது மகனையும் தாய்க்கு அவர் எழுப்பிய கோவிலிலேயே அடக்கம் செய்துள்ளனர்.


Leave a Reply