”முப்பது கோடி முகமுடையாள்..”: பாரதியின் கவிதையை வானொலியில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி!

அயோத்தி நில வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் நிதிதுறைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார். மேலும் பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி ஒற்றுமை குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

59ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணிய குடிமக்களுக்கு நன்றி எனக் கூறினார். தீர்ப்பு வந்தபின் 130 கோடி இந்தியர்களுக்கும் தேசிய நலன் தான் எப்போதும் முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர் என்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

 

டிசம்பர் 7ஆம் தேதி முப்படைகளின் கொடி தினம் கொண்டாட முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார். நடப்பாண்டை சர்வதேச மொழிகளில் ஆண்டாக ஐநா அறிவித்து இருப்பதாகவும் 18 வகையான மொழிகள் இந்தியாவில் பேசப்பட்டாலும் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

 

இதனை விவரிக்கும் வகையில் “முப்பது கோடி முகமுடையாள்” என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி நமது நாட்டுக்கு 30 கோடி முகங்கள் இருந்தாலும் தேசம் என்ற ஒரே உடலை தான் கொண்டுள்ளோம் என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார்.


Leave a Reply