தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால், அடிமை ஆட்சி என்பதா? பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது இப்பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, உட்கட்சிப் பதவிக்கு போட்டியிட 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என, கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

 

தொடர்ந்து பொதுக் குழுக் கூட்டத்தில், அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழுவில் பேசினர்.

 

பொதுக்குழுவின் நிறைவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில், தேர்தலுக்கு 20 நாட்கள் முன்பு தான் அதிமுக கூட்டணி விடுவானது.தாமதமாக கூட்டணி உருவானாலும், வலுவான கூட்டணியாக அமைந்தது. ஆனால் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி ஏற்பட்டதால் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்தது. மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் பிரித்துப் பார்த்தே மக்கள் வாக்களித்தது தெரிகிறது.

அதிமுக அரசு என்ன சாதனை செய்து விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க .ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலலே 5.11 லட்சம் மக்களின் குறைகளை தீர்த்து வைத்துள்ளோம். அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவில்லாமல் அரசு ஊழியர்களை போராட மு.க.ஸ்டாலின் தூண்டுகிறார்.

 

தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன், அதிமுக அரசு இணக்கமாக செல்கிறது. ஆனால் பாஜகவின் அடிமை ஆட்சி என்று எங்களை விமர்சிக்கிறார்.மத்தியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் பங்கு வகித்த திமுக, தமிழகத்துக்கு எந்த நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

 

தற்போது தமிழகத்தில் கட்சியே தொடங்காமல் சிலர் எங்களை விமர்சிக்கின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் எங்களை எவ்வளவு பாடாய்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து மீண்டு, தொண்டர்களின் இயக்கமான அதிமுக இப்போது வெற்றி நடை போடுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Leave a Reply