இராமநாதரம் மாவட்டம், திருவாடானை கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சி திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில், நூலகர் விஜயா முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு வாசிப்பதின் அவசியம் பற்றிய தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் இணைந்து மழைகால சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர், நூலக புரவலர் சிங்கராயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலக உதவியாளர் மாலதி பிரேமா நன்றி கூறினார்கள். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனர்.