மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஏற்பட்டதையடுத்து சென்னையில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் மருந்துகள் தயாரிக்கும் தொழிலை மேம்படுத்தும் வகையில் மெடி பார்க் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைய உள்ளதாகவும் தொழில் துறை மூலமாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விஜயபாஸ்கர் கூறினார்.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.