சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்ய போவதில்லை

சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவதில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திரைப்படம் வெளிவரும் போது நடிகர்கள் விளம்பரத்திற்காக பேசுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கு வருவேன் என பலமுறை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததையும், ஆனால் இதுவரை அவர் அரசியலுக்கு வரவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

 

சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் விடுதலையாகி விடுவார் எனவும், கட்சியை நல்ல முறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு உள்ளது எனவும் அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் எனவும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


Leave a Reply