பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழ்பெற்ற கவின், லாஸ்லியா இருவரின் காதலை ஏற்க லாஸ்லியாவின் தந்தை நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லாஸ்லியா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானார்.
ஆரம்பத்தில் அவரது நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள் அவருக்கு ஆர்மியாக மாறினார். இதனால் ஓவியா ஆர்மிக்கு பிறகு சமூக வலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி மிகப் பிரபலமடைந்தது. கவின் லாஸ்லியா இருவரது காதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டாலும், அவரது ஆர்மியினரிடம் பெரும் ஆதரவு இருந்து வந்தது.
பிக்பாஸ் வீட்டிற்குள் உருகி உருகி காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை நேரில் சந்தித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும், கவின் லாஸ்லியா இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதது போலவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த இடைவெளி இன்று வரை நீடித்து வருகிறது. லாஸ்லியாவின் தந்தையிடம் கவின் பேச முயற்சித்தபோது ஓராண்டு இருவரும் மீண்டும் பேசிக்கொள்ளாமல் இருந்து, அதன் பின்னரும் அதே காதலுடன் இருவரும் இருந்தால் மகளின் காதலை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கவினும் லாஸ்லியாவும் தங்களது காதலை நிரூபிக்கவே இதுநாள் வரை விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோலிவுட் awaitslosliya அதாவது தமிழ் திரையுலகம் லாஸ்லியாவிற்காக காத்திருக்கிறது எனும் ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர் லாஸ்லியா ரசிகர்கள் .