அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருதுகளை வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் 2 விருதுகளை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதற்காக ஒரு விருதும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதற்காக மற்றொரு விருதும் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.