சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என தமிழக அரசுக்கு எதிராக பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும் என நீதிபதி அருண் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். ஒருவேளை வரும் 25-ஆம் தேதி பொன்மாணிக்கவேல் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றால் உடனே உச்ச நீதிமன்றத்தை அணுக நீதிபதி அறிவுறுத்தினார்.
நவம்பர் 26ம் தேதியை தமிழக அரசின் மனுவை விசாரிப்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறு இல்லையென்றால் டிசம்பர் இரண்டாம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.