திருமாவளவனுக்கு நடிகை கஸ்தூரி வேண்டுகோள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தொண்டர்களை கட்சி தலைமை தண்டிக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமாவளவனுக்கும் தமக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் பட்டியலினத்தவருக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

 

அண்மையில் புனித தலங்களை அவமதிக்கும் விஷயங்களை விமர்சித்து தாம் பதிவிட்டிருந்ததாகவும், தனி நபரையும் சமூகத்தையும் குறிப்பிடாத நிலையில் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினருக்கு எதிராக உள்ளதாக கூறி சிலர் வம்புக்கு இழுப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

 

தனிநபரையோ ,செய்தியையோ குறிப்பிட்ட பேசாத நிலையில் தம் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் அளிப்பது சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல் என்றும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற அவதூறு நடவடிக்கைகள் திருமாவளவனுக்கு தெரிந்து நடக்கவில்லை என்று நம்புவதாகவும் நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply