ஈழத்தமிழர்களின் நலன் காத்திடுக – திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபயா பதவி ஏற்றிருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களின் நலனையும், உரிமையையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

அவரது அறிக்கையில் இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபயா ராஜபக்சே அங்கு வாழும் தமிழர்கள் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் குடிமக்களே என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப மனித நேயத்துடனும்,சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அதுவே கோத்தபாயவின் அரசியல் வாழ்வில் புதிய பாதையாக அமைந்துவிடும் எனவும் அதையே உலக சமுதாயமும் திமுகவும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறது என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

கோத்தபாயவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி அவர்களும் பாரதிய ஜனதா அரசும் ஈழத் தமிழர்களின் நலனையும், உரிமையும் பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பதே உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply